கோச்சடையான் என்பது சௌந்தர்யா அஸ்வின் இயக்கி, கே. எஸ். ரவிக்குமார் கதை அமைத்து, மே 23, 2014 அன்று வெளிவந்த முப்பரிமாண இதிகாச தமிழ்த்திரைப்படமாகும்.ரசினிகாந்து கோச்சடையனாகவும் இவருடன் ஆர். சரத்குமார், ஆதி, தீபிகா படுகோன், ஷோபனா, ருக்மணி விஜயகுமார், ஜாக்கி ஷெராப் மற்றும் நாசர் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படமானது முப்பரிமாண தோற்றத்தில், ராஜீவ் மேனனின் ஒளிப்பதிவிலும் ஏர்.ஆர்.ரகுமானின் இசையமைப்பிலும் வெளியாகிறது. தெலுங்கில் ”விக்ரம சிம்கா” எனும் பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட உள்ளதோடு மட்டுமல்லாமல் ஹிந்தி, மலையாளம், ஜப்பானியம் மற்றும்ஆங்கில மொழிகளிலெல்லாம் மொழிமாற்றம் செய்யப்பட உள்ளது. படப்பதிவு முடிவுற்ற நிலையில் படப்பதிவிற்குப் பிந்தைய பணிகள் லண்டன், ஹாங்காங் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் ஆகிய நகரங்களில் நடைபெற்றன.
No comments:
Post a Comment