கி.பி. 710 முதல் 735 வரை அரசாட்சி செய்து வந்த பாண்டிய மன்னன் ரணதீரன். இவனது முழு பெயர் கோச்சடையான் ரணதீரன். இவனது தந்தையார் பெயர் அரிகேசரி மாறவர்மன். பட்டம் சூட்டியது : கி.பி. 710
சேரர்களையும் சோழர்களையும் விஞ்சி, மராட்டிய மாநிலம் வரை சென்று அங்கு மங்களாபுரத்தில் (அது தற்போது மங்களூர் என்றழைக்கப்படுகிறது) தனது இராச்சியத்தை நிறுவியவன் இந்த கோச்சடையன். அதன் பின்னர் மத்தியில் ஆண்ட சாளுக்கியர்கள் மீது போர் தொடுத்தான். இவனது காலத்தில் நடந்த சம்பவங்களே ‘கோச்சடையானின்’ கதை.
சௌந்தர்யா விளக்கம்
கோச்சடையான் என்பது பாண்டிய மன்னனின் பெயர் என்பது ஒருபுறமிருந்தாலும், படத்தை இயக்கும் சௌந்தர்யா அஸ்வின், இந்தப் பெயர் சிவபெருமானைக் குறிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் ராணாவுக்கு முந்தைய பாகம்தான் கோச்சடையான் என்றும் சௌந்தர்யா கூறியுள்ளார்.
கதாநாயகி தீபிகா படுகோன்
கோச்சடையான் படத்தில் முதலில் கத்ரீனா கைஃப் நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் தகுந்த தேதிகளை கொடுக்க முடியாததன் காரணமாக அவருக்குப் பதில் தீபிகா படுகோன் ஒப்பந்தமானார். அதே போல, ரஜினியின் தங்கை வேடத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமான சினேகாவும் நீக்கப்பட்டார். அவருக்குப் பதில் ருக்மணி ஒப்பந்தமானார். இவர் பாரதிராஜாவின் பொம்மலாட்டம் படத்தில் நடித்தவர்.
No comments:
Post a Comment